சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் உணவு பகுப்பாய்வு விழிப்புணர்வு முகாம்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாலில் உள்ள தரம் மற்றும் கலப்படத்தை அறியும் வண்ணம் உணவு பகுப்பாய்வு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை (நவ. 22) முதல் நடைபெற உள்ளது. 
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க. லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
சிவகங்கை மாவட்ட உபயோகிப்பாளர் மற்றும் பொதுமக்கள் நேரடியாக நிலையங்களிலிருந்து பெறப்படும் பாலின் தரம் குறித்து அறிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனே பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் புதன்கிழமை முதல் அந்தந்தப் பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றியங்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ள உணவு பகுப்பாய்வு விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள் தங்கள் தினசரி உபயோகிக்கும் பாலைக் கொண்டு வந்து, இந்த முகாமில் பரிசோதனை செய்து கொள்ளலாம். சோதனைக்குப் பின் பாலின் தரம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.
முகாம் நடைபெறும் இடங்கள்:
நவ.22 ஆம் தேதி சிவகங்கை நகராட்சி அலுவலகம் ( சிவகங்கை நகர் மற்றும் தாலுகா பகுதி மக்கள்), நவ.23 ஆம் தேதி திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் (திருப்புவனம் மற்றும் மானாமதுரை பகுதி மக்கள்), நவ.24 ஆம் தேதி காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (காளையார்கோவில் மற்றும் இளையான்குடி பகுதி மக்கள்), நவ.27 இல் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகம் (சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் பகுதி மக்கள் ), நவ.28 இல் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் (திருப்பத்தூர் மற்றும் கல்லல் பகுதி மக்கள்), நவ.29 இல் காரைக்குடி நகராட்சி அலுவலகம் (காரைக்குடி மற்றும் சாக்கோட்டை பகுதி மக்கள்), டிச.1 ஆம் தேதி தேவகோட்டை நகராட்சி அலுவலகம் (தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT