சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இலவச "செட்-டாப் பாக்ஸ்' வழங்கல்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா செட்-டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியர் க. லதா தெரிவித்துள்ளார்.
      இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு வழங்குவதற்காக 1,000 செட்-டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டுள்ளன. இவை, உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு, செயலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
     உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சந்தாதாரர்களுக்கு செட்-டாப் பாக்ஸ்களை விலையில்லாமல் வழங்க வேண்டும். மேலும், விலையில்லா செட்-டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களின் இடத்தில் நிறுவி, அதனை செயலாக்கம் செய்வதற்காக மட்டுமே ரூ. 200  ஒருமுறை மட்டுமே பெற்றுக் கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  விலையில்லா செட்-டாப் பாக்ஸ் என்பதால் நிறுவுதல் மற்றும் செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.200-க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை ஏதும் செலுத்த வேண்டாம்.    இதற்கு மேல் கூடுதல் தொகை வசூலித்தால், சந்தாதாரர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT