சிவகங்கை

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையே மாநில கால்பந்து, கோ-கோ போட்டிகள்: செப். 18-இல் தொடக்கம்

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே 17 மற்றும் 19 வயதுக்குள்பட்டோருக்கு மாநில அளவிலான கால்பந்து மற்றும் கோ-கோ விளையாட் டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து போட்டிகளை நடத்தும் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி தாளாளர் செ. சத்யன் சார்பில் பள்ளியின் கல்வி ஆலோசகர் ஷீலா, பள்ளி முதல்வர் சிவகுமார் ஆகியோர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய 3 மாநிலங்களிலிருந்து கால்பந்து மற்றும் கோ-கோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதுவரை 3,465 வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். கால்பந்துப் போட்டிகள் செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி, அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வித்துறை கல்லூரி மைதானம் 1, 2, பவநகர் விளையாட்டு அரங்கம், வேலங்குடி புளுஸ், கண்டனூர் பாலையூர்,அழகப்பா மெட்ரிகுலேசன் ,கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சி கல்லூரி மைதானம் என 8 மைதானங்களில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி மைதானத்தில் நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சுழற் கேடயங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
பேட்டியின்போது பள்ளியின் துணை முதல்வர்கள் வெங்கட்ரமணன், அருள்பிரபாகர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT