சிவகங்கை

மாமலை வனப்பகுதியில் வேட்டை: 6 பேர் கைது

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள மாமலை வனப்பகுதியில் புதன்கிழமை முயல் வேட்டைக்குச் சென்ற 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
   புழுதிபட்டி மாயாண்டிபட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ராமு (40), அய்யாத்துரை மகன் குமார்(29), கருப்பையா மகன் அழகு (50), பழனி மகன் பூமிநாதன் (37), உத்தம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் சின்னையா (56), சின்னையா மகன் சிவசந்திரன்(32).  இவர்கள் 6 பேரும் திருப்பத்தூர் அருகேயுள்ள மாமலை வனப்பகுதியில் முயல் வேட்டைக்குச் சென்றனராம்.  இது தொடர்பாக வனத்துறையினருக்கு வந்த தகவலையடுத்து  வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் காசி, பழனி உள்ளிட்ட  வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது 6 பேரும் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து, முயல் வேட்டைக்கு பயன்படுத்தும் எறி கம்புகள் கைப்பற்றப்பட்டு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT