முகப்பு
சிவகங்கை

சிங்கம்புணரியில் உலகத் தாய்மொழி நாள் பொதுக்கூட்டம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உலகத் தாய்மொழி நாளையொட்டிப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உலகத் தாய்மொழி நாளையொட்டிப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 தமிழ்நாடு கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணி சிங்கம்புணரி சீரணி அரங்கம் முதல் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. தொடர்ந்து பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்துக்கு தமிழ்நாடு கல்வி இயக்க தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் செ.கர்ணன் தலைமை வகித்தார். லெ.அன்புச்செழியன் வரவேற்றார். தமிழ்நாடு கல்வி இயக்கத் தோழர்கள் தமிழ்குமரன், பன்னீர்செல்வம், குமரன், வழக்குரைஞர் எழிலரசு, பொன்பகீரதன், ஆசிரியர் முத்துப்பாண்டி ஆகியோர் பேசினர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழர் கழக நிறுவனர் இரா.பாவாணன் சிறப்புரையாற்றினார். பேரணி மற்றும் பரப்புரையில் தமிழ்நாடு கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பாரூக்முகமதுஅலி, பாலசுப்பிரமணியன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கெளசிக் நன்றி கூறினார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →