முகப்பு
சிவகங்கை

ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகள்: அறிவிப்புப் பலகை அமைக்க பயணிகள் கோரிக்கை

காரைக்குடி ரயில் நிலையத்திற்கு வரும் நகரப் பேருந்துகளின் நேரம் குறித்து ரயில் நிலையம், பழைய, புதிய பேருந்து நிலையங்களில்

Updated On : 21 மே, 2018 at 11:53 PM
பகிர்:

காரைக்குடி ரயில் நிலையத்திற்கு வரும் நகரப் பேருந்துகளின் நேரம் குறித்து ரயில் நிலையம், பழைய, புதிய பேருந்து நிலையங்களில் அறிவிப்புப் பலகை அமைக்க பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
காரைக்குடி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக காரைக்குடி ரயில் நிலையத்திற்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் காலை 4 மணிக்கு சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் வரும் நேரத்திற்கும், ஞாயிறு, வியாழக்கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கு சிலம்பு விரைவு ரயில் வரும் நேரத்திற்கும், ராமேஸ்வரம்- சென்னை விரைவு ரயில், பயணிகள் ரயில்கள், பல்லவன் விரைவு ரயில் புறப்பாடு மற்றும் வருகை தரும் நேரத்திற்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என காரைக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
இதனை பேருந்து கால அட்டவணையில் அறிவிப்பு பலகையாக காரைக்குடி ரயில் நிலையம், காரைக்குடி பழைய, புதிய பேருந்து நிலையங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.