சிவகங்கை

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

DIN


சிவகங்கை மாவட்ட சைல்டுலைன் துணை மையத்தின் சார்பில் குழந்தைகள் தின விழாவையொட்டி மானாமதுரை ரயில் நிலையத்தில் சைல்டுலைன் உறுப்பினர்கள், ரயில்வே காவல்துறை, ரயில்வே ஊழியர்கள் பங்கேற்ற ரயில் யாத்ரா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது சைல்டுலைன் 1098 குறித்து பயணிகளிடமும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு மானாமதுரை ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் துரை தலைமை வகித்தார். பாலியல் தாக்குதலிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என சைல்டுலைன் இயக்குநர் வனராஜன் பேசினார். இதில் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ரசீந்திரகுமார், சைல்டுலைன் உறுப்பினர்கள் சாந்தி, சரவணன், தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT