சிவகங்கை

சிவகங்கை அருகே விஷம் சாப்பிட்ட தாய், 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

DIN


சிவகங்கை அருகே இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தற்கொலைக்கு முயன்ற தாய் ஆகிய 3 பேரும் சனிக்கிழமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிவகங்கை அருகே கண்டுபட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி செல்வராணி (28). இவர்களுக்கு 2 வயதில் தர்ஷினி என்ற மகளும், மூன்று மாதக் குழந்தையான ரோகித் என்ற மகனும் உள்ளனர்.
ராஜசேகர் வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சனிக்கிழமை மாலை செல்வராணி குழந்தைகக்கு நாக்கில் விஷத்தை தடவி விட்டு, தானும் விஷம் சாப்பிட்டார்.
வெளியில் சென்று விட்டு திரும்பிய ராஜசேகர், வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே மூவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதகுபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT