சிவகங்கை

மானாமதுரை அருகே மயில்கள் வேட்டை?

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மர்மமான முறையில் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் வெள்ளிக்கிழமை மாலை இறந்து கிடந்தன. தகவலறிந்து வனத்துறையினர் வருவதற்குள் அனைத்து மயில்களும் மாயமானதால் மர்ம நபர்களால் மயில்கள் வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் (48) என்பவர் சுமார் 3 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வாங்கி வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்,இவரது நிலப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்துள்ளன.  
அந்த வழியாகச் சென்ற சிலர் இதனை பார்த்தவுடன் இறந்த மயில்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து விட்டு, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தகவல் தெரிவிப்பதற்காக ஊருக்குள் சென்றுள்ளனர். 
அதன்பின்னர், வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் மீண்டும் வந்து பார்த்தபோது குவித்து வைக்கப்பட்டிருந்த மயில்களை காணவில்லையாம். 
  இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர்  விசாரித்து வருகின்றனர்.மேலும்,இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT