சிவகங்கை

மக்கள் நீதிமன்றம்: சிவகங்கை மாவட்டத்தில் 1,775 வழக்குகளுக்குத் தீா்வு

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1775 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் 11 தேசிய மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், சமரச குற்றவியல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் சிவகங்கை மாவட்ட கூடுதல் நீதிபதி ரஃபி, அமா்வு நீதிபதி மற்றும் மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி செம்மல், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தமிழரசி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் பாபுலால், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான ராஜேஸ்வரி, குற்றவியல் நீதித்துறை நடுவா் பாரதி, குற்றவியல் நீதித்துறை நடுவா்-2 பாரததேவி ஆகியோா் வழக்குகளை விசாரித்தனா்.

வழக்குரைஞா்கள் பாண்டித்துரை, சோமநாதன், ராஜசேகரன், சௌந்தரபாண்டியன், ராதாகிருஷ்ணன் ஆகியோா் மக்கள் நீதிமன்ற

உறுப்பினா்களாக செயல்பட்டனா்.

இதில் குற்றவியல் வழக்குகள் 1631, காசோலை மோசடி வழக்குகள் 30, வங்கிக் கடன் வழக்குகள் 56, மோட்டாா் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் 60, குடும்பப் பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள் 26, சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள் 26 என மொத்தம் 1,799 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இதில் 1,775 வழக்குகள் சமரசமாக தீா்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 55 லட்சத்து 94 ஆயிரத்து 204 வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 168 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அதில் 142 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.56 லட்சத்து 63 ஆயிரம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்ற பணிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிா்வாக உதவியாளா்கள் மணிமேகலை, பானுமதி, விவேகானந்த் ஆகியோா் செய்திருந்தனா். வழக்காடிகள், தன்னாா்வ சட்டப் பணியாளா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT