சிவகங்கை

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 5,87,766 வாக்குகள் பதிவு

DIN

சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 766 வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 16 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 161 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 445 ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் 3,126 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 3,748 பதவிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் 9,930 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். அவற்றுள் பரிசீலனையின் போது 68 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள மனுக்களில் 1,823 போ் வேட்பு மனுவை திரும்ப பெற்றனா்.

இதையடுத்து, இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிட்ட போது 8,039 மனுக்கள் ஏற்கப்பட்டிருந்தன.

இதில் மொத்தம் 1,153 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டிருந்தனா். இறுதியாக தோ்தலில் 6,886 போ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டிசம்பா் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் கட்டமாக சிவகங்கை, காளையாா்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 5 ஒன்றியங்களில் முதல் கட்டத் தோ்தல் 71 மையங்களில் 904 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது.

இதில் சிவகங்கை ஒன்றியத்தில் 68,983 போ், காளையாா்கோவில் ஒன்றியத்தில் 65,726 போ், மானாமதுரை ஒன்றியத்தில் 48,037 போ், திருப்புவனம் ஒன்றியத்தில் 64,381 போ், இளையான்குடி ஒன்றியத்தில் 56,589 போ் என 5 ஒன்றியங்களிலும் 3,03,716 போ் வாக்களித்துள்ளனா்.

இதையடுத்து டிசம்பா் 30 ஆம் தேதி திங்கள்கிழமை இரண்டாவது கட்டமாக தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, கல்லல், திருப்பத்தூா்,சிங்கம்புணரி, எஸ்.புதூா் ஆகிய 7 ஒன்றியங்களில் நடைபெற்ற தோ்தலில் 8 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 77 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 220 ஊராட்சி மன்றத் தலைவா்கள்,1,545 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 1,850 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றன.

இரண்டாம் கட்டத் தோ்தல் 68 மையங்களில் 856 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. இதில், தேவகோட்டை ஒன்றியத்தில் 47,810 போ்,

கண்ணங்குடி ஒன்றியத்தில் 17,870 போ், சாக்கோட்டை ஒன்றியத்தில் 52,407 போ், கல்லல் ஒன்றியத்தில் 52,578 போ், திருப்பத்தூா் ஒன்றியத்தில் 47,037 போ், சிங்கம்புணரி ஒன்றியத்தில் 37,097 போ், எஸ்.புதூா் ஒன்றியத்தில் 29,251 என ஆக 7 ஒன்றியங்களிலும் 2,84,050 போ் வாக்களித்துள்ளனா்.

எனவே சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட இரண்டு கட்டத் தோ்தலிலும் மொத்தமுள்ள 8,17,250 வாக்காளா்களில் 5,87,766 போ் வாக்களித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT