சிவகங்கை

மானாமதுரை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தெப்பத்தேர் உற்சவம்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசிமகத்தை முன்னிட்டு தெப்பத்தேர் உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
   இக்கோயிலில் மாசிமக உற்சவ விழா கடந்த ஒருவாரத்துக்கு முன்பு தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் கோயிலில் மூலவருக்கும் உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தெப்பத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதன்பின் உற்சவர் அம்மன் அலங்காரத்துடன் சப்பரத்தேரில் எழுந்தருளி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் வீதிகளில் அம்மனை வரவேற்று பூஜைகள் நடத்தினர். பின்னர் கோயிலுக்கு வந்தடைந்த அம்மன் அங்குள்ள தெப்பக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து தேர் தெப்பத்தைச் சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT