சிவகங்கை

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

DIN

சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத் துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மனிதச் சங்கிலி  புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா தலைமை வகித்து மனிதச் சங்கிலியை தொடக்கி வைத்தார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் உடனிருந்தார்.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும், அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழிலாளர் நலத் துறையின் உதவி ஆணையர் (பொறுப்பு) எஸ்.மைவிழிச்செல்வி, குழந்தைகள் நல ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ராமநாதன், ஜெயபிரகாஷ்,சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல்கபூர் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT