சிவகங்கை

காரைக்குடி கம்பன் திருவிழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி

DIN

காரைக்குடி தனியார் திருமண மண்டபத்தில் கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் திருவிழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி கம்பன் கவி மண்டலம் என்ற பொருளில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
 விழாவுக்கு, கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமை வகித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி முன்னாள் முதல்வர் அழகர் ராமானுஜம் கம்பரின் முதல் பாட லையும், நிறைவுப்பாடலையும் சுட்டிக்காட்டி கம்பரின் வழியில் வாழும் நன்முறை உள்ளன என்றும், அரியணை அனுமன் தாங்க.. என்ற பாடலில் அனுமனின் அடக்கமும், திடமும் வெளிப்பட்டு நிற்கிறது என்றும் குறிப்பிட்டார்.
"கம்பன் கவி ஈர்ப்பு மையம்' என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல்காதர் பேசினார். மேலும் இப்பேச்சின் தலைப்பிலான நூலை கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் வெளியிட, அதனை புதுச்சேரி கம்பன் அறிஞர் ரா. ராமசாமி பெற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT