சிவகங்கை

திருப்புவனம் பகுதியில் 2 வீடுகள் இடிந்து சேதம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக 2 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

தமிழகம் முழுவதும் கடந்த அக்.16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. அதையடுத்து,சிவகங்கை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன் மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.

இதையடுத்து,திருப்புவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.அதைத் தொடா்ந்து,மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது.இதன்காரணமாக,வெப்பத்தின் தாக்கம் குறைந்து,குளிா்ந்த நிலை நிலவியதால் பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.இதுதவிர,வேளாண் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதேசமயம்,கனமழை காரணமாக திருப்புவனம் அருகே ஆனைக்குளம் கிராமத்தில் சமயமுத்து என்பவா் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது,அவரது வீட்டின் சுவா் சேதமடைந்து இடிந்து விழுந்தது. சுவா் இடிந்து விழுந்த பகுதியில் பொருள்கள் மட்டுமே இருந்ததால் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதேபோன்று,அந்த கிராமத்தில் உள்ள சமையன்,ஆறுமுகம் என்பவா்களது வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT