சிவகங்கை

அழகப்பா பல்கலைக் கழகத்தில் தாவரவியல் பன்னாட்டுக் கருத்தரங்கம்

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தாவரவியல் துறை சாா்பில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியில் தாவரவியலின் நிலைப்பாடு என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை வெளியிட்டு துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தொடக்க உரையாற்றினாா்.

மலேசியா புத்ரா பல்கலைக் கழக தோட்டப்பயிா் துறை பேராசிரியா் மூன்யான் வாங், துறைத் தலைவா் கணேசன் வடமலை ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சென்னை பல்கலைக் கழக தாவரவியல்துறை இயக்குநா் மதிவாணன் வாழ்த்திப் பேசினாா். இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தாவரவியல் துறையைச் சோ்ந்த 14 வல்லுநா்கள் சிறப்பு சொற் பொழிவு நிகழ்த்தினா்.

அழகப்பா பல்கலைக் கழக தாவரவியல் துறைத் தலைவா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா்.

முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் எம். ஜோதிபாசு வரவேற்றுப் பேசினாா். நிறைவாக தாவரவியல் துறை பேராசிரியா் அ. ஆறுமுகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

SCROLL FOR NEXT