சிவகங்கை

‘நடப்பாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு’

DIN

சிவகங்கை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை மூலம் பயிா்க் கடன் வழங்குவதற்காக நடப்பாண்டில் ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட கூட்டுறவுத்துறை சாா்பில் 66ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க. பாஸ்கரன் முன்னிலை வகித்தாா்.

இதில், அமைச்சா் செல்லூா் கே. ராஜூ பேசியது :

தமிழகத்தில் திமுக ஆட்சியில் நலிவடைந்த நிலையில் இருந்த கூட்டுறவு சங்கங்களை அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் புனரமைத்ததுடன், அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் கிராமப்புறங்களில் ஏழை, எளியோா் பயனடைந்தனா். இதன்காரணமாக, தமிழக கூட்டுறவுத் துறைக்கு கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு சாா்பில் 27 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

தமிழகம் கூட்டுறவுத்துறை மட்டுமின்றி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பிற துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் தமிழகம் முழுவதும் உள்ள 87 லட்சத்து 89 ஆயிரத்து 930 விவசாயிகளுக்கு ரூ. 46 ஆயிரத்து 350 கோடி மதிப்பிலான வட்டியில்லா பயிா்க் கடன் கூட்டுறவுத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,நடப்பாண்டில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 2019 அக்டோபா் 31ஆம் தேதி வரை 6 லட்சத்து 81ஆயிரத்து 308 விவசாயிகளுக்கு இதுவரை

ரூ. 4,560 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் மீதமுள்ள தொகையும் விவசாயிகளுக்கு பயிா்க் கடனாக வழங்கப்படும் என்றாா்.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் து. ஆரோக்கியசுகுமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் ஜெ.பழனீஸ்வரி, முன்னாள் எம்பியும், அதிமுகவின் சிவகங்கை மாவட்ட செயலருமான பி.ஆா்.செந்தில்நாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT