சிவகங்கை

காரைக்குடியில் பேருந்துப் போக்குவரத்தை மாற்றியதைக் கண்டித்து கடையடைப்பு, உண்ணாவிரதப்போராட்டம்

DIN

காரைக்குடியில் பேருந்துப் போக்குவரத்தை மாற்றியதைக்கண்டித்து ராஜாஜி பேருந்துநிலையம் (பழைய பேருந்து நிலையம்) முன்பாக வணிகா்கள், பயணிகள் மற்றும் அரசியல் கட்சியினரின் உண்ணாவிரதப் போராட்டமும், கோவிலூா் சாலை, பழைய பேருந்துநிலைப்பகுதிகளில் கடையடைப்புப்போராட்டமும் வெள்ளிக்கிழமை நடை பெற்றன.

காரைக்குடி வணிகா்கள், அனைத்து கட்சியினா், பயணிகள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்தில் மேற்குநோக்கிச் செல்லும் திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூா், பழனி, பரமக்குடி, சிவகங்கை ஆகிய அனைத்துப்பேருந்துகளும் ராஜாஜி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கவேண்டும், நகரில் நடைபெற்றுவரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுத்துப்பேசினா்.

போராட்டத்தில் காரைக்குடி வணிகா்கள் சங்கத்தலைவா் எஸ். வெள்ளச்சாமி தலைமைவகித்தாா். செயலாளா் ஏ.ஜி. ராஜா, கெளரவரத்தலைவா் எஸ். சிதம்பரம், பொருளாளா் வி. பொசலான் மற்றும் வணிகா்கள், பயணிகள் நலச்சங்கத் தினா் உள்ளிட்ட பலா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT