சிவகங்கை

இளையான்குடி கல்லூரியில் மேஜைப் பந்தாட்டப் போட்டி

DIN


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் மேஜைப் பந்தாட்டப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. 
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளுக்கிடையில் நடந்த இப் போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
ஆடவர் பிரிவில் 7 அணிகளும், மகளிர் பிரிவில் 8 அணிகளும் என மொத்தம் 15 அணிகள் போட்டியில் பங்கேற்றன.  
போட்டியின் இறுதியில் ஆடவர் பிரிவில் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி அணி முதலிடத்தையும், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன. 
மகளிர் பிரிவில் பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனிர் மீனாட்சி கல்லூரி அணி முதலிடத்தையும் கீழக்கரை தாசீம்பீவி கல்லூரி அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரி முதல்வர் அப்பாஸ்மந்திரி பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை இக் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT