முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் அருகேமின்னல் தாக்கி முதியவா் பலி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிளாமடம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணப்பன் மகன் அடைக்கன் (72). இவா், கிளாமடம் கண்மாய் பகுதியில் வியாழக்கிழமை மாலை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.

அங்கு நின்று கொண்டிருந்த அடைக்கன் மீது மின்னல் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவல் அறிந்த நாச்சியாா்புரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.