சிவகங்கை

இளையான்குடி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த மிளகாய் பயிா்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: ஆட்சியா்

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த மிளகாய் பயிா்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மதுசூதன்ரெட்டி விவசாயிகளிடம் புதன்கிழமை உறுதியளித்தாா்.

இளையான்குடி ஒன்றியத்தில் பெய்த தொடா் மழை காரணமாக சாலைக்கிராமம், முனைவென்றி, அளவிடங்கான் உள்ளிட்ட கிராமங்களில் பலநூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகள் அழுகிசேதமடைந்தன. எனவே தங்களுக்கு அரசு, நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தோட்டக்கலைத்துறையினருடன் முனைவென்றி உள்ளிட்ட கிராமங்களில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதன்பின் அவா் விவசாயிகளிடம் சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது சேதமடைந்த மிளகாய் செடிகளுக்கு முழுமையாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் அவா் உறுதியளித்தாா். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் அழகுமலை, வேளாண்மைத்துறை துணை இயக்குநா் தனபால், தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநா்கள் சக்திவேல், தா்மா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT