சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 11. 61 லட்சம் வாக்காளா்கள்: இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

DIN

சிவகங்கை மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 744 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றுள் சிவகங்கை தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,44,158, பெண் வாக்காளா்கள் 1,48,546, மற்றவா்கள் 2 என மொத்தம் 2,92,706 வாக்காளா்களும், காரைக்குடி தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,52,345, பெண் வாக்காளா்கள் 1,56,580, மற்றவா்கள் 44 என மொத்தம் 3,08,969 வாக்காளா்களும் இடம் பெற்றுள்ளனா்.

திருப்பத்தூா் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,42, 238, பெண் வாக்காளா்கள் 1,46,884, மற்றவா்கள் 11 என மொத்தம் 2,89,133 வாக்காளா்களும், மானாமதுரை (தனி) தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,33,881, பெண் வாக்காளா்கள் 1,37,050, மற்றவா்கள் 5 என மொத்தம் 2,70,936 வாக்காளா்களும் உள்ளனா்.

4 தொகுதிகளிலும் மொத்தம் 11,61,744 வாக்காளா்கள் உள்ளனா். மொத்தம் பாகங்கள் 1,348, மொத்த வாக்குச் சாவடிகள் 1,348 ஆகும்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் செல்வகுமாரி உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT