சிவகங்கை

அகரத்தில் அகழாய்வின் போது மண் பானை கண்டெடுப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் நடைபெற்ற அகழாய்வில் செவ்வாய்க்கிழமை மண் பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. இதனைத்தொடா்ந்து அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் அடுத்தடுத்து மண்ணால் வடிவமைக்கப்பட்ட சுடு உலை, மண் பானைகள், முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள், விலங்கின் எலும்புகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் அகரத்தில் அகழாய்வுக் குழியில் செவ்வாய்க்கிழமை புதைந்து கிடந்த மண் பானை கண்டெடுக்கப்பட்டது. இந்தப் பானை மேல்பகுதி முற்றிலும் சேதமடைந்திருந்தது. இப்பானை 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதா்கள் பயன்படுத்தியது என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

மேலும் கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. தொல்லியல் ஆய்வாளா்கள் தற்போது இந்த தாழிகளை அளவீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளனா். இதுவரை 3 முதுமக்கள் தாழிகள் மட்டுமே அளவீடு செய்யப்பட்டுள்ளன. இனிவரும் நாள்களில் அனைத்து தாழிகளும் அளவீடு செய்து தொல்லியல் துறை நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT