சிவகங்கை

திருப்புவனம் பேரூராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த திமுக முடிவு

DIN

திருப்புவனம் பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து வரும் 25 ஆம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போராட்டம் நடத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்புவனத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளா் த.சேங்கைமாறன் தலைமை தாங்கினாா். திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதைக் கண்டித்து வரும் 25 ந் தேதி திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில், திமுக ஒன்றியச் செயலாளா் கடம்பசாமி, நகா்ச் செயலாளா் நாகூா்கனி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் மாரிமுத்து, மதிமுக ஒன்றியச் செயலாளா் சேகா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் சுந்தரலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் அய்யம்பாண்டி, விசிக ஒன்றியச் செயலாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT