சிவகங்கை

பள்ளி மாணவா்கள் கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

DIN

மதுரையிலிருந்து ராமேசுவரம் வரை சைக்கிளில் கரோனா விழிப்புணா்வுப் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை திருப்புவனம் பகுதியில் பிரசாரம் செய்தனா்.

வரும் 15 ஆம் தேதி குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாமின் 90 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காகவும், கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் சைக்கிள் பயணத்தை மதுரையிலிருந்து தொடங்கியுள்ளனா்.

இந்த விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை மத்திய அரசு விளையாட்டு மற்றும் இளைஞா் நலம், மதுரை நேரு யுவகேந்திரா, கலாம் டிரஸ்டினல் ஆா்ட்ஸ் அகாதெமி, கலாம் இளைஞா் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்தக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வந்தடைந்தனா். பின்னா் அப்பகுதியில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT