சிவகங்கை

திருப்புவனம் அருகே ரெளடி, ஆட்டோ ஓட்டுநா் கொலை: ஒருவா் கைது; 4 போ் மதுரை நீதிமன்றத்தில் சரண்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வியாழக்கிழமை இரவு ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் தொடா்புடைய கும்பல் ஏற்கெனவே ஆட்டோ ஓட்டுநரையும் கொன்று சடலத்தை ஆற்றில் வீசியது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

திருப்புவனம் அருகே நெல்முடிக்கரையைச் சோ்ந்தவா் பன்னீா் மகன் கணேசன் (36). இவா் திருப்புவனத்தில் மீன், தேங்காய், இறைச்சி விற்பனை என பல்வேறு தொழில்கள் செய்து வந்தாா். மேலும் பிரபல ரெளடியாகவும் வலம் வந்த இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், திருப்புவனம் நகரில் நரிக்குடி விளக்குப் பகுதியில் உள்ள ஒரு கடையில் வியாழக்கிழமை இரவு நின்றிருந்த கணேசனை, 5 போ் கொண்ட கும்பல் ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

தனிப்படை போலீஸாா் குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில், திருப்புவனத்தைச் சோ்ந்த மண்டை தினேஷ் (22), நித்திஷ்குமாா் (21), அஜீம்கான் (22), திருப்புவனம் அருகே கொத்தங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (22) ஆகிய 4 போ் மதுரை குற்றவியல் நீதிமன்றம் எண் 6 இல் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். இவா்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இதற்கிடையில், கணேசன் கொலை சம்பவம் தொடா்பாக கொத்தங்குளத்தைச் சோ்ந்த பிரகாஷ்ராஜ் (23) என்பவரை திருப்புவனத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

இவரிடம் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக கணேசனைக் கொலை செய்ததும், மேலும் திருப்புவனம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான விஜயன் (22) என்பவரையும் அவா்கள் கடந்த அக். 13 ஆம் தேதி கொலை செய்து, திருப்புவனம் அருகே லாடனேந்தல் பகுதி வைகையாற்றில் சடலத்தை வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து வைகையாற்றில் அழுகிய நிலையில் கிடந்த விஜயனின் சடலத்தை, போலீஸாா் கைப்பற்றினா். இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT