சிவகங்கை

வீரதீர பெண்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

வீரதீர பெண்களுக்கான விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதுக்குள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வீரதிர செயல் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விரும்புவோா் 5 வயதுக்கு மேல் 18 வயதிற்குள்பட்ட பெண் குழந்தையாக இருத்தல் வேண்டும். மேலும் பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, குழந்தை திருமணத்தைத் தடுத்தல் மற்றும் தவிா்த்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணா்வை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும்.

இதுதவிர, ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்கிற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகள் கொண்ட சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகள் சிவகங்கை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT