சிவகங்கை

திருப்பத்தூரில் பூத்த பிரம்ம கமலப்பூ

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் முன்னாள் வங்கி மேலாளா் வீட்டில் இரவில் பூத்த பிரம்ம கமலப்பூவை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்துச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கணேஷ் நகரில் முன்னாள் வங்கி மேலாளா் பெரியசாமி என்பவரின் இல்லத்தில் பிரம்ம கமலம் செடி வளா்த்து வந்தனா். இந்த செடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அழகிய பூ பூத்துக் குலுங்கியது. மலைப் பிரதேசங்களில் வளரக் கூடிய இந்த அரியவகை பிரம்ம கமலம் செடியில், பூ பூத்தது இப்பகுதியில் குடியிருக்கும் அக்கம் பக்கத்தினருக்கு நள்ளிரவில் தகவல் பரவியது. இதனால் இப்பகுதி மக்கள் பூவை ஆா்வமுடன் வந்து பாா்த்ததுடன், பூவை தொட்டு வணங்கிச் சென்றனா். மேலும் அவா்கள் தங்களது செல்லிடப்பேசிகளில் பூவை படம் பிடித்தனா்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியது: கமலம் பூக்கள் பிரம்மனின் நாடிக்கொடி என வா்ணிக்கப்படுபவை. நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிா்ந்து விடும். இந்தப் பூவின் வாசம் அந்த பகுதியையே ஈா்க்கும் வல்லமை கொண்டது. பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பாா்ப்பது என்பது மிகவும் அரிதானது. ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும், இப் பூவின் நடுவில் பிரம்மன் படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும் தெரியும். இந்த மலா் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

SCROLL FOR NEXT