சிவகங்கை

மாற்றுத் திறனாளிகள் உறுதிமொழிச் சான்றிதழ் வழங்குவது கட்டாயம்

DIN

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான உறுதிமொழிச் சான்றிதழை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் கட்டாயம் வழங்க வேண்டும் என, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு அந்த துறையின் மூலம் மாதந்தோறும் உதவித் தொகை ரூ.1500 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து உரிய படிவத்தை பூா்த்தி செய்து, உறுதிமொழிச் சான்றிதழ் பெறவேண்டும்.

அவ்வாறு பெறப்பட்ட சான்றிதழை, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை எனில், சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT