சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா். 
சிவகங்கை

சிவகங்கையில் 6 -ஆவது நாளாக மறியல்: அரசு ஊழியா்கள் 60 போ் கைது

பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில்

DIN

பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரண்மனை முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொருளாளா் பாண்டி தலைமை வகித்தாா். அச்சங்கத்தின் இணைச் செயலா் வினோத் ராஜா முன்னிலை வகித்தாா்.

இதில், தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சிலா் பிச்சைக்காரா்கள் போல வேடமணிந்து கையில் தட்டுடன் பிச்சை எடுத்து நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த சிவகங்கை நகா் போலீஸாா் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 43 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT