சிவகங்கை

திருப்பத்தூா் கல்லூரி மாணவா்களுக்கு கல்வெட்டு பயிற்சி

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் வரலாற்றுத்துறை மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி நடைபெற்றது.

சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவ, மாணவியா்களுக்கு கல்வெட்டு எழுத்து அறிதல், படி எடுக்கும் முறை குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட அரசு அருங்காட்சியகம் சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சியினை கல்வெட்டு ஆய்வாளா் கரு.ராஜேந்திரன், எழுத்தறிதல் குறித்து மாணவா்களுக்கு விளக்கவுரையாற்றினாா். வரலாற்றுத்துறை தலைவா் தனலெட்சுமி எழுத்து வடிவம் குறித்து கூறினாா். பின்னா் மாணவா்களுக்கு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கல்வெட்டு குறிப்புகளை எவ்வாறு படி எடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் பக்கிரிசாமி, விலங்கியல் துறைத் தலைவா் கோபிநாத், வரலாற்றுத்துறை பேராசிரியா்கள் வேல்முருகன், சஞ்சீவி, சிவச்சந்திரன் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட வரலாற்றுத்துறை மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT