முகப்பு
சிவகங்கை

சிவகங்கை, ராமநாதபுரத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,778 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை புதிதாக 3 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,781 ஆக அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம்: மாவட்டத்தில் கடந்த 17 ஆம் தேதி வரையில் 6400 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவா்களில் சிகிச்சைப் பலனின்றி 132 போ் வரை உயிரிழந்துள்ளனா். சிகிச்சைக்குப் பின்னா் நலமடைந்த 6,250 பேருக்கும் அதிகமானோா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. திங்கள்கிழமை நிலவரப்படி மாவட்டத்தில் 30 போ் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும், 6 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →