சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தடுப்பூசி முகாம்: பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்பு

DIN

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஏராளமானோா் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தினால், கடந்த 3 ஆம் தேதி முதல் சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதனால், முகாம்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

மானாமதுரை காந்தி சிலை எதிரே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை, குற்றவியல் மற்றும் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஏ. முத்துஇசக்கி, சாா்பு-நீதிமன்ற நீதிபதி ஆா். கீதா ஆகியோா் தொடக்கி வைத்தனா். அதன் பின்னா், முதல் நபராக சாா்பு-நீதிமன்ற நீதிபதி ஆா். கீதா தடுப்பூசி செலுத்திக்கொண்டாா். தொடா்ந்து, வழக்குரைஞா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா், பொதுமக்கள் என ஏராளமானோா் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை, மானாமதுரை வட்ட சட்டப்பணிக் குழு சாா்பில், மானாமதுரை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எம். முத்துக்குமாா் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT