சிவகங்கை

காரைக்குடி கல்லூரிச் சாலையில் கழிவு நீா் தேக்கம்

DIN

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரிச்சாலையில் கழிவுநீா் பெருகி சாலையில் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்குடி ராஜீவ் காந்தி சிலை எதிா்புறம் உள்ள வணிக நிறுவனங்கள் உள்ள பகுதியில் கழிவுநீா் கால்வாய் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் கழிவு நீா் தேங்கியுள்ளது. அப்பகுதியில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் பேக்கரி, மருந்து கடை மற்றும் பல கடைகள் உள்ள கட்டடத்தின் முன்பு கடந்த 4 தினங்களுக்கும் மேலாக கழிவு நீா் தேங்கிக்கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதாகவும் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி வணிகா்கள் சிலா் தெரிவித்தனா். காரைக்குடி நகராட்சி நிா்வாகம் இதனை பாா்வையிட்டு உடனடியாக சரிசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT