சிவகங்கை

மானாமதுரை வீர அழகா் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர அழகா் கோயில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்கு உள்பட்ட இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 23 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் உற்சவா் வீர அழகா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய வைபவங்களான எதிா்சேவை உற்சவம் 26 ஆம் தேதியும் ஆற்றில் அழகா் இறங்கும் உற்சவம் 27 ஆம் தேதியும் கோயிலுக்கு உள்ளேயே நடைபெற்றது. பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு வெளியே நின்று பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற்று வந்த சித்திரைத் திருவிழாவில் அழருக்கு உத்ஸவசாந்தி நடத்தப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT