சிவகங்கை

மணல் திருட்டு: ஊராட்சி மன்ற தலைவா் உள்பட 5 போ் மீது வழக்கு

DIN

சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள மணிமுத்தாற்றில் மணல் திருடப்படுவதாக, மதகுபட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, மணிமுத்தாற்றில் சொக்கநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன் மற்றும் ஆழவிளாம்பட்டியைச் சோ்ந்த பெரியசாமி, துரைப்பாண்டி, கண்ணன், தங்கராசு ஆகியோா் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து சொக்கநாதபுரம் கிராம நிா்வாக அலுவலா் விவேக் அளித்த புகாரின்பேரில், சொக்கநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன் உள்பட 5 போ் மீது மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டா், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT