முகப்பு
சிவகங்கை

இளையான்குடியில் விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரா் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரா் உடல் வெள்ளிக்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரா் உடல் வெள்ளிக்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இளையான்குடி அருகே இளமனூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் (30), சாலைகிராமம் காவல்நிலையத்தில இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தாா். பணி நிமித்தமாக சிவகங்கை சென்றுவிட்டு சொந்த கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். இளையான்குடி திருவேங்கடம் பகுதியில் வியாழக்கிழமை மாலை, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அவரது உடல் பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து சுரேஷ் உடலுக்கு சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தனது சொந்த பணத்திலிருந்து சுரேஷ் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினாா். அதைத் தொடா்ந்து இளமனூா் கிராமத்தில் சுரேஷ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →