மானாமதுரையில் தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்து புதிய அரசுப் பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார். 
சிவகங்கை

மானாமதுரையில் புதிய அரசுப் பேருந்து சேவை, பேருந்து நிறுத்தம் தொடக்க விழா

மானாமதுரையில் புதிய அரசுப் பேருந்து சேவைகள் மற்றும் பேருந்து நிறுத்தம் தொடக்க விழா நடைபெற்றது.

DIN

மானாமதுரையில் புதிய அரசுப் பேருந்து சேவைகள் மற்றும் பேருந்து நிறுத்தம் தொடக்க விழா நடைபெற்றது.

மானாமதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்திற்கு புதிய அரசுப் பேருந்து சேவையும் மானாமதுரை ஒன்றியம் கீழப்பசலை கிராமத்திலிருந்து மானாமதுரை வழியாக சிவகங்கைக்கு அரசு நகர்ப் பேருந்து சேவையும் தொடக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ தமிழரசி கலந்து கொண்டு புதிய அரசுப் பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மானாமதுரையில் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலையில் தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே புதிய பேருந்து நிறுத்தத்தையும் எம்.எல்.ஏ தமிழரசி திறந்து வைத்துப் பேசினார். 

அப்போது தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இங்கு புதிய பேருந்து நிறுத்தத்திற்கான கட்டடம் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார். இவ்விழாவில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணாதுரை, மானாமதுரை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜாமணி, முன்னாள் கவுன்சிலர் முனியசாமி, மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT