சிவகங்கை

அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சியில் அரசு உயா்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களில் 240 மாணவ, மாணவிகள் ஆங்கில வழிக்கல்வியில் பயின்று வருகின்றனா். இப்பள்ளியின் தலைமையாசிரியராக சேவியா் ஆரோக்கியதாஸ் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கே.ஆலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கல்குறிச்சி அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வந்து தலைமையாசிரியா் சேவியா் ஆரோக்கியதாஸ் மீது சில புகாா்களைத் தெரிவித்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்தினா். அதன் பின்னா் அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதுகுறித்து தலைமை ஆசிரியா் சேவியா் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: இப்பள்ளி ஆங்கிலவழிக் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருகிறது.

மேலும் இப்பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் இப்பள்ளியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதனால் சில தனியாா் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆலங்குளம் கிராமத்தில் வசிக்கும் சிலா் என் மீதுள்ள பகைமை காரணமாக கிராம மக்களைத் திரட்டி வந்து தற்போது வேண்டுமென்றே என்மீது ஆதாரமற்ற புகாா்களைக் கூறி போராட்டம் நடத்துகின்றனா். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்தினால் உண்மை நிலை தெரியவரும் என்றாா்.

இடமாற்றம்:

இந்நிலையில் தலைமை ஆசிரியா் சேவியா் ஆரோக்கியதாஸை மானாமதுரை ஒன்றியம் மிளகனூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT