மானாமதுரையில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவின்போது வளையல்கள், பூமாலைகள் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன். 
சிவகங்கை

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் கடந்த திங்கள்கிழமை இரவு ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்றது. 

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் கடந்த திங்கள்கிழமை இரவு ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்றது. 

இக்கோயிலில் தற்போது ஆடித்தபசு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற திரு ஆடிப்பூர சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கோயில் முன் மண்டபத்தில் ஆனந்தவல்லி அம்மன் அன்ன வாகனத்தில் வளையல் மாலை, பூமாலைகள் அலங்காரத்துடன் எழுந்தருளி அருள்பாலித்தார். 

ஆடிப்பூரம் உற்சவத்தின் போது ஆனந்தவல்லி அம்மன் கோயிலுக்குள் வளையல்கள் வாங்கிய பெண் பக்தர்கள்.

அதன்பின் கும்பம் வைத்து சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பூர்ணாஹூதி  முடிந்து ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. கோயிலுக்குள் திரண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆடிப்பூர உற்சவத்தைக் கண்டு தரிசித்தனர். அதன்பின் கோயிலுக்குள் பெண்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பெண்கள் வளையல்களை பெற்றுக் கொண்டனர். 

ஆடித்தபசு விழாவில் இரண்டாவது நாள் ஏ.எல்.எஸ்.ராமையா நாடார் குமாரர்கள் குடும்பத்தினர் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், நடைபெற்று அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று முடிந்ததும் அம்மன் வீதி உலா புறப்பாடு தொடங்கியது.

சிவாச்சாரியார்களின் கைலாய வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஆனந்தவல்லி அம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் உலா வந்து கோயிலை வந்தடைந்தார். வீதிகளில் மக்கள் ஆனந்தவல்லி அம்மனை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். இரவில் கோயில் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானாவில் அரசுப்பேருந்து - லாரி மோதல்: 19 பேர் பலி

தில்லியில் பத்தாண்டுகளில் காணாமல் போன 1.8 லட்சம் குழந்தைகள்! 50 ஆயிரம் பேரின் நிலை?

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

DIGITAL ARREST மோசடியில் புதிய உச்சம்! 58 கோடியை இழந்த தம்பதி! | Digital Arrest

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

SCROLL FOR NEXT