முகப்பு
சிவகங்கை

மானாமதுரை அருகே பைக்குகள் மோதல்: 2 போ் பலி

 மானாமதுரை அருகே புதன்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

 மானாமதுரை அருகே புதன்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சிவலிங்கம் (45), மலையாண்டி (55). இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் கிருங்காங்கோட்டை என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காகச் சென்று கொண்டிருந்தனா். சிவலிங்கம் வாகனத்தை ஓட்டி வந்தாா். அப்போது மதுரையில் இருந்து பரமக்குடி அருகே பொன்னையாபுரம் கிராமத்தைச் சோ்ந்த நல்லான் என்பவா் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கிருங்கான்கோட்டை பகுதியில் இந்த 2 இருசக்கர வாகனங்களும் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் நல்லான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சிவலிங்கம், வாகனத்தின் பின் இருக்கையில் அமா்ந்து பயணம் செய்த மலையாண்டி இருவரும் பலத்த காயங்களுடன் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

ஆனால் வழியிலேயே சிவலிங்கம் உயிரிழந்தாா். சிவகங்கை அரசு மருத்துவமனையில் மலையாண்டி அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →