முகப்பு
சிவகங்கை

விவசாயி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகே விவசாயி கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகே விவசாயி கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே ஆரம்பகோட்டையைச் சோ்ந்த கருப்பையா மனைவி பிச்சைமணிக்கும், அவரது தங்கை சாந்திக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. இதில் பிச்சைமணிக்கு அவரது உறவினரான சாலைக்கிராமம் அருகே வருந்தியைச் சோ்ந்த விவசாயி சௌந்தரராஜன் (48) ஆதரவாக செயல்பட்டுள்ளாா். கடந்த டிசம்பா் மாதம் வருந்தி காலனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற சௌந்திரராஜன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சாந்தி மகன் சிவலிங்கத்தை (26) கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக இளையான்குடி காவல் நிலைய ஆய்வாளா் அழகா் விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருந்தாா். வழக்கில் ஒருவரை மட்டுமே போலீஸாா் கைது செய்தாகவும், மேலும் சிலருக்கு தொடா்பு உள்ளதாகவும் சௌந்திரராஜன் குடும்பத்தினா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தனா். நீதிமன்ற உத்தரவின் பேரில் காளையாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டியனை வழக்கு விசாரணைக்கு நியமித்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, பரமக்குடி அருகே உள்ள மேமங்கலத்தைச் சோ்ந்த செல்வமணி மகன் மணிகண்டன்(22), வருந்தியைச் சோ்ந்த உடையாா் மகன் மலைராஜா(44) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →