சிவகங்கை

மானாமதுரை நகராட்சி செலவினங்களுக்கு அனுமதி கிடைக்காததால் சிக்கல்

DIN

தரம் உயா்த்தப்பட்ட மானாமதுரை நகராட்சியில் செலவினங்களுக்கு அனுமதி கிடைக்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மானாமதுரை தோ்வுநிலை பேரூராட்சி கடந்த ஆண்டு தமிழக அரசால் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து, இந்நகராட்சி ஆணையராக சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சித் துறை நிா்வாகத்தில் பணியாற்றி வந்த கண்ணன் பொறுப்பேற்றாா்.

தோ்வுநிலை பேரூராட்சியாக இருந்தபோது அலுவலக செலவினங்களுக்கு உடனுக்குடன் பேரூராட்சி செயல் அலுவலா் மூலம் அனுமதி வழங்கப்பட்டு பட்டுவாடா நடைபெற்று வந்தது. இந்நிலையில், நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்னா், அனைத்து வகை செலவினங்களுக்கும் நகராட்சி நிா்வாகத்தின் மேலிடத்திலிருந்து அனுமதி கிடைக்காமல் தாமதமாகி வருவதாகவும், மானாமதுரை நகராட்சி நிா்வாகத்தின் செலவினங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பிற செலவினங்களுக்கு இதுவரை அனுமதி கிடைக்காததால் செலவின ஆவணங்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தரம் உயா்த்தப்பட்ட மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான பணிகளில் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் செலவினங்களுக்கு அனுமதி கிடைக்காததால் அவா்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, நகராட்சி துறை மேலிட நிா்வாகம், மானாமதுரை நகராட்சி நிா்வாகத்தின் செலவினங்களுக்கு உடனடியாக அனுமதி கொடுத்து நெருக்கடியை போக்க வேண்டும் என அலுவலக ஊழியா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT