மானாமதுரை அருகே அ.விளாக்குளத்தில் நடந்த ஆட்டுக்கிடா முட்டு சண்டைப் போட்டியில் மோதிக்கொண்ட கிடாக்கள். 
சிவகங்கை

மானாமதுரையில் கோயில் திருவிழாவில் கிடா முட்டு சண்டைப் போட்டி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை கிடா முட்டு சண்டைப் போட்டி நடைபெற்றது. 

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை கிடா முட்டு சண்டைப் போட்டி நடைபெற்றது. 

போட்டியில் வென்ற ஆட்டுக்கிடாக்களுக்கு விழாக் குழு சார்பில் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

அ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம், வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கிடா முட்டு சண்டை போட்டியை  மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி தொடங்கி வைத்தார்.  

பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிடாக்கள் போட்டியில் பங்கேற்றன. போட்டிக்கான களத்தில் நேருக்கு நேர் கிடாக்கள் மோதி சண்டையிட்டன. அதிக முறை முட்டிக்கொண்ட கிடாக்களுக்கு வெற்றி பகிர்ந்தளிக்கப்பட்டது. எதிரில் நின்று களமாடிய கிடாவின் முட்டு தாங்காமல்  பல கிடாக்கள் ஓட்டம் பிடித்தன. 

களத்தில் கம்பீரமாக நின்று முட்டிய கிடாக்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற கிடாக்களின் உரிமையாளர்களுக்கு விழாக்குழு சார்பில் பித்தளை அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. 

கிடா முட்டு சண்டை போட்டியைக் காண மைதானத்தைச் சுற்றி ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை)  விளாக்குளத்தில் கபடி போட்டி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT