சிவகங்கை

திருப்புவனம் அருகே புலியூர் பாம்பாட்டி சித்தர் கோயிலில் வைகாசி உற்சவ விழா

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் புலியூர் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் கோயிலில் வைகாசி உற்சவ விழா தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த காப்புக் கட்டிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழா   உற்சவங்களில் வைகை ஆற்றுக்கு சென்று கரகம் எடுத்து வருதல், பால்குடம் சுமந்து வருதல், தீ மிதித்தல் பதினெட்டாம்படி கருப்பு கதவு திறந்தல், சாமியாட்டம் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றது.

மேலும், பாம்பாட்டி சித்தருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வேண்டுதல்  நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி பாலா சித்தர் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT