சிவகங்கை

மானாமதுரையில் புதிய வெண்கல குதிரை வாகனம் வெள்ளோட்டம்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குலாலர் சமுதாயத்திற்கு சொந்தமான கோயில்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய குதிரை வாகனத்தின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

மண்பாண்டப் பொருட்கள் உற்பத்திக்கு பெயர்போன மானாமதுரையில் குலாலர் சமுதாய மக்கள் மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சமுதாய மக்களுக்கு சொந்தமான பல கோயில்கள் மானாமதுரையில் உள்ளன. 

மானாமதுரையில் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள குதிரை வாகனம்

இதையடுத்து இக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது சுவாமி புறப்பாட்டிற்கு பயன்படுத்த ரூ.4 லட்சம் மதிப்பில், 80 கிலோ எடையில் வெண்கலத்தால் புதிய குதிரை வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குதிரை வாகனத்திற்கான வெள்ளோட்டத்தை முன்னிட்டு குலாலர் சமுதாயத்திற்கான பஜனை மடத்தில் புதிய குதிரை வாகனத்தின் மேல் கும்பம் வைத்து குலால சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனை காட்டப்பட்யதும் குதிரை வாகனம் மெல்லோட்டம் புறப்பட்டது. 

குதிரை வாகனம் குலாலர் தெருவில் அனைத்து பகுதிகளுக்கும் தூக்கிச் செல்லப்பட்டபோது, குலாலர் சமுதாய மக்கள் குதிரை வாகனத்தை வரவேற்று ஆரத்தி எடுத்தும் பூஜைகள் நடத்தியும் தரிசனம் செய்தனர். 

நாளை (மார்ச்-18) குலாலர் தெருவில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது உற்சவர் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள வெண்கல குதிரை வாகனத்தின் மீது ஏறி முதல் முறையாக வீதி உலா வருதல் நடைபெறும் என குலாலர் சமுதாய மக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT