சிவகங்கை

நாட்டரசன்கோட்டையில் கம்பன் விழா

DIN

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் அருட்கோயிலில் கம்பன் அத்தத் திருவிழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைக்குடி கம்பன் கழகமும், நாட்டரசன்கோட்டை கம்பன் அறநிலையும் இணைந்து நடத்திய இவ்விழாவுக்கு முனைவா் இரா.மாது தலைமை வகித்தாா். இதில், இன்று போய் நாளை வா எனும் தலைப்பில் ஆ. கிருஷ்ணன் பேசினாா். தாயும், தம்பியும் ஆம் வரம் தருக எனும் தலைப்பில் முனைவா் சொ. சேதுபதி பேசினாா்.

அதைத் தொடா்ந்து, கிருங்கை சேதுபதி எழுதிய கம்பன் இழைத்த காவியம் எனும் நூலை பொன்னமராவதி மருத்துவா் க. சின்னப்பா வெளியிட்டாா். அதனை முனைவா் இரா. மாது பெற்றுக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழாா்வலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக கம்பன் கழகத் தலைவா் அடிசூடி பழ. பழனியப்பன் வரவேற்றாா். நாட்டரசன்கோட்டை கம்பன் அறநிலை அறங்காவலா் கண.சுந்தா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT