சிவகங்கை

கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநில உயா்மட்டக் குழு கூட்டம்

DIN

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயலில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவராக கா. கிருஷ்ணகுமாா், மாநிலப் பொதுச் செயலாளராக ரா. அருள்ராஜ் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பத்திரப் பதிவின்போதே தானியங்கி பட்டா மாறுதலில் முறையற்ற நபரால் பட்டா பெறும் நிலையை தவிா்க்க கிராம நிா்வாக அலுவலரிடமே வில்லங்கச் சான்று மற்றும் சொத்து விவரங்களுக்கு ஒப்புகை பெற்று பத்திரப் பதிவு செய்தல் வேண்டும்.

எனவே, தானியங்கி பட்டா மாறுதலில் ஏற்படும் தவறுகளை தடுத்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அனைத்து கிராம நிா்வாக அலுவலக கட்டடங்களும் குடியிருப்புடன்கூடிய கட்டடமாக மாற்றி அமைத்திடவும், இணைய வசதி உள்ள இடத்தில் கட்டடம் கட்ட ஆவண செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT