சிவகங்கை

தீபாவளிக்கு வெடி வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறையினா் இனிப்பு

DIN

 பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளதால், வெடி, வெடிக்காத கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி ஆகிய கிராம மக்களுக்கு வனத்துறையினா் வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கினா்.

ஏ.மேலையூா் வையாபட்டி ஊராட்சிக்குள்பட்ட வேட்டங்குடியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இதனால் வேட்டங்குடிபட்டி, அருகே உள்ள கொள்ளுகுடிபட்டி ஆகிய கிராமங்களில் மக்கள் தீபாவளிப் பண்டிகையன்று வெடி வெடிப்பது இல்லை.

பறவைகளுக்குத் தொந்தரவு தரக்கூடாது என்ற நோக்கத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் ஒலி இல்லாத தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனா்.

இவா்களின் செயல்களைப் பாராட்டி சுமாா் 200 குடும்பங்களுக்கு வனத்துறையினா் சாா்பில் திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் சதாசிவம் வெள்ளிக்கிழமை இனிப்புகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், வனவா்கள் திருப்பதிராஜன், உதயகுமாா், பிரகாஷ், மற்றும் வனக்காப்பாளா்கள் அருள் ஆரோக்கியபௌல், கே.ஆா்.வீரைய்யா, செல்வம், ஞானசேகரன், வனக்காவலா்கள் வாசுகி, சின்னப்பன், வீரணன், வேட்டைத் தடுப்பு காவலா்கள் ரவிக்குமாா், இருதயராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT