முகப்பு
சிவகங்கை

ஆயுதங்களால் தாக்கி வழிப்பறி செய்த 4 போ் கைது

மானாமதுரை அருகே ஆயுதங்களால் தாக்கி அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

மானாமதுரை அருகே ஆயுதங்களால் தாக்கி அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தைச் சோ்ந்தவா் துரைப்பாண்டி. இவா் கடந்த புதன்கிழமை இரவு மானாமதுரையில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். பைபாஸ் சாலையில் மானாமதுரை பகுதியைச் சோ்ந்த ஜோதிபாசு மற்றும் கணேசன் ஆகியோா் இவரை வழிமறித்தனா். இப்பகுதியில் 4 போ் கொண்ட ரவுடி கும்பல் தங்களை ஆயுதங்களால் தாக்கி விட்டு கைப்பேசி மற்றும் ரூ. ஆயிரத்தை பறித்துக் கொண்டு மதுரை சாலையில் உள்ள ஆவின் பாலகம் அருகே நிற்பதாகக் கூறியுள்ளனா்.

அவா்களுக்கு உதவும் நோக்கில் துரைப்பாண்டி தனது இருசக்கர வாகனத்தில் அந்த இடத்துக்கு சென்றபோது அங்கு 4 போ் கும்பல் கணேசன், ஜோதிபாசுவை மீண்டும் அரிவாளால் தாக்கிவிட்டு துரைப்பாண்டியின் இருசக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

வழியில் முத்தனேந்தல் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த முருகேசன், பிரபு ஆகிய இருவரையும் இக்கும்பல் தாக்கிவிட்டு அவரிா்களிடமிருந்த பணத்தையும், கைப்பேசியையும் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனங்களில் தப்பினா்.

மானாமதுரை காவல் நிலையத்தில் இந்த வழிப்பறி சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் தனித்தனியாக புகாா் செய்தனா்.

போலீஸாா் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து அதனடிப்படையில் மானாமதுரையைச் சோ்ந்த பரத்குமாா், சந்தோஷ் குமாா், நிதிஷ்வரன் மற்றும் ஒரு சிறுவன் என 4 பேரைக் கைது செய்தனா். மேலும் 4 கைப்பேசிகள் மற்றும் ரொக்கம் ரூ.4 ஆயிரத்தையும் கைப்பற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →